Wednesday, March 9, 2022

 ஹிஜாப் - பயத்தை விட அதிக நம்பிக்கை கொண்ட பெண்கள்!

கர்நாடகாவில் பல பள்ளிகளில் ஹிஜாப் அணியும், மாணவிகளை வகுப்பறையின் வாயில்களிலேயே நிறுத்தும் போக்கு நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, திட்டமிடப்பட்ட அரசியல் லாபத்த சங்பரிவார்களுக்கு கொடுத்து வருகிறது. அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு சமூகம் குறிவைக்கப்படுவது என்பது இது முதல் தடவையல்ல என்றாலும், இம்முறை தென் மாநிலங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு பயன்படுத்தப்படுவதை தான் உற்று கவனிக்க வேண்டும்.

இது அனைத்தும் இந்த ஆண்டு ஜனவரி

மாதம் கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் தொடங்கியது, அங்கு ஹிஜாப் அணிந்த மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. அவர்கள் ஹிஜாபை அகற்றும் வரை தனி அறைகளில் அமருமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டது. பின்னர், ஹிஜாப் அணிந்ததால் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெரும்பான்மை வலதுசாரிகள் முன்வைக்கும் வாதங்கள் அனைத்துமே, பல்வேறு சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் அரசியலமைப்பு ரீதியாக மறுக்கப்படுகின்றன என்பது தான் உண்மை. அரசியலமைப்பு மாணவர்களுக்கு அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப ஆடை அணியும் உரிமையை உத்தரவாதம் செய்வது மட்டுமல்லாமல், இந்திய அரசியலமைப்பிற்கு முரணான எந்தவொரு ஆவணத்தையும் எதிர்த்து (அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப்பைக் கூறலாம்) நீதிமன்றத்தில் வழக்கு நடத்தலாம் என்பது சட்டப்பூர்வமாக நிறுவப்பட்ட ஒன்றாகும். சட்டத்தின் படி. எனவே, இந்த வழக்கில், முஸ்லிம் மாணவிகள் வகுப்பறைகளுக்குள் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் அரசின் ஆடைக் கட்டுப்பாடு உத்தரவு, அரசியலமைப்பிற்கு எதிரான ஒன்றாகும்.
கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கை ஒரு பெரிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. ஆனால். பிரச்சினையின் பதற்றம் எந்த நேரத்தில் முடிவடையும் என்று தெரியவில்லை. இந்த வழக்கில் ஹிஜாபுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர், ஒருவர் விரும்பிய ஆடையை அணியும் உரிமை இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமை என்றும், கடந்த காலங்களில் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்களால் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மேலும், அதற்கு எதிராக வாதாடிய மற்றொரு மனுதாரர் கல்வி நிறுவனங்களுக்கு தலையில் முக்காடு மற்றும் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் மாநில அரசின் ஆடைக் கட்டுப்பாடு விதிகளை, சட்டப்பூர்வமாக நிரூபிக்க முயன்றார்.
ஆனால், அவர்களால் அதில் போதுமான ஆதாரங்களை எடுத்து வைக்க முடியவில்லை. ஏனென்றால், இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில், அனைவருக்கும் அவர்களுடைய மத நடைமுறைகளை பின்பற்றுவதற்கு அரசியல் சாசன சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. இது தான் இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கையாகும். பிரான்சைப் போலல்லாமல் மற்றவர்களின் நடைமுறைகளில் தலையிடாமல், ஒவ்வொரு மதமும் அதன் விதிமுறைகளைப் பின்பற்ற அனுமதி அளிக்கிறது. அது இந்தியாவின் ஒற்றுமை.
இவ்வளவுக்கு வாதங்களுக்கு மத்தியில், நமக்கு ஒரு கேள்விகள் எழுகின்றன – ஹிஜாப் தான் உண்மையான பிரச்சனையா? இது இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை களங்கப்படுத்துகிறதா? ஹிஜாப் பழமைவாதத்தையோ அல்லது தாராளவாதத்தையோ தொந்தரவு செய்கிறதா? என்பதைப் பார்க்க வேண்டும்.
ஹிஜாப் தான் உண்மையான பிரச்சனையா?
கர்நாடகா போன்ற மாநிலங்களில் சங்பாரத்தினர், இந்து பெண்களையும் ஜீன்ஸ், ஸ்கர்ட் அணியும் போது கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதும், அதேப்போன்று தீபாவளி விளம்பரத்திற்கு சேலைக்குப் பதிலாக குர்தா அணிந்து வரும் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனர். மேலும் அவர்களுக்கு ஒரு பெண் தன்னை விரும்பி மறைத்துக் கொள்கிறாள் என்பது பிரச்சனையல்ல, இந்திய முஸ்லீம் பெண்கள் கல்வி கற்கிறார்கள், முன்னேறுகிறார்கள், தங்கள் உரிமைகளுக்காக நிற்கிறார்கள், உலகம் முழுவதும் அவர்களின் துணிச்சலுக்காகப் பாராட்டப்படுகிறார்கள், அவர்கள் செல்லும் இடமெல்லாம் தடம் பதிக்கிறார்கள் என்பதே மையப் பிரச்சினை.
இஸ்லாமிய பெண்கள் தங்கள் அடக்கத்தை, தங்கள் கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்கிறார்களா என்று பார்த்தால், எந்தப் போராட்டங்களிலும் விட்டுக் கொடுப்பதில்லை. ஒரு நவீன பெண்ணாக இருப்பதற்காக அவர்கள் தங்கள் கலாச்சாரத்தை சமரசம் செய்ய வேண்டியதில்லை என்பதை அவர்கள் உற்று நோக்குகிறார்கள். நவீனத்துவம் என்பது வேர்களை மறப்பது என்பதல்ல என்ற உண்மையை அவர்கள் புரிந்து செயல்படுவது தான், சங்பரிவார்களின் கண்களை உறுத்துகிறது.
ஹிஜாப் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை களங்கப்படுத்துகிறதா?
இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்தியா ஒரு இறையாண்மை, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு. இது ஒவ்வொரு நபரும் அவரவர் விருப்பப்படி மதத்தை கடைப்பிடிக்கவும், பின்பற்றவும் அனுமதிக்கிறது. அரசியலமைப்பின் 21வது பிரிவு, நீங்கள் என்ன அணிய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை உள்ளடக்கிய அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை உத்தரவாதம் செய்கிறது. பிரிவு 15 மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்பதை உறுதிப்படுத்துகிறது.
சீக்கியர்கள் தலைப்பாகை அணிவதைத் தேர்வுசெய்யக்கூடிய நாட்டில், ஒரு முதல்வர் காவி நிறத் தொப்பியை அலுவலகத்திலும் வெளியிலும் அணிவதைத் தேர்வுசெய்யக்கூடிய நாட்டில் தான், ஹிஜாப் அணிவது மிகவும் அவமானகரமானதாகத் தெரிகிறது.
உண்மையைச் சொன்னால், பாசிசவாதிகள் மதச்சார்பின்மை பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. அவர்களின் நிகழ்ச்சி நிரல் ஒரு சமூகத்தை குறிவைப்பதும், தேசத்தை ஒரே மதமாக மாற்றுவதும், எந்த வழியில் முடியுமோ, அந்த வழியில் எல்லாம் அதை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதே அவர்களின் நோக்கமாக இருந்திருந்தால், இரு மதங்களுக்கு இடையே நல்லுறவைக் காட்டும் விளம்பரங்களுக்கு எதிராக, லவ்-ஜிஹாத் போன்ற அவதூறு பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும்???
மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு, வலதுசாரிகள் முஸ்லீம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், ஆணாதிக்கத்திலிருந்து அவர்களை விடுவிக்கவும் முத்தலாக் சட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கூக்கிரலிட்டார்கள். தற்போது, அதே முஸ்லிம் பெண்களின் கல்வி கற்பதைத் தடை செய்ய வேண்டும் என்பதற்காக ஹிஜாப் பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்கள். இதை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது. இந்திய நாடு வழங்கியுள்ள அனைத்து மக்களுக்குமான உரிமைகளை ஒரு போதும் விட்டுவிடக்கூடாது. நாம் தொடர்ந்து ஹிஜாப் உரிமைக்காக போராட வேண்டும். இதன்மூலம், முஸ்லிம் பெண்களிடம் தைரியம் தான் அதிகரித்துள்ளதே தவிர, பயம் கொள்ளவில்லை. ஹிஜாப் எனது உரிமை!

- நெல்லை சலீம்

Friday, February 21, 2020

காந்தியின் முதல் போராட்டமே தென்னாப்பிரிக்காவில் CAAவுக்கு எதிரானதே!


இந்து வெறியன் நாதுராம் கோட்சேவால் ஜனவரி 30, 1948 அன்று, மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை அவரது ஆதரவாளர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற போர்க்குரலை எழுப்புவது மூலம்ஒவ்வொரு நாளும் மகாத்மாவைக் கொன்று வருகிறார்கள்தனது சொந்த மாநிலமான குஜராத்தில்காந்திஜி 2002ல் ஆயிரம் முறை கொல்லப்பட்டார், 2,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதன் மூலம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்வீடுகள் மற்றும் கடைகள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டனபிறக்காத குழந்தைகள் கூட தங்கள் தாய்மார்களின் வயிற்றில் இருந்து வெளியேற்றப்பட்டு கொல்லப்பட்டனர்


இருண்ட முகங்களான கோட்சே மற்றும் அவனுக்கு வழிகாட்டியான சாவர்க்கரை காந்தியின் செயல்பாடுகளோடு இணைத்து அடையாளப்படுத்துவதன் மூலம்காந்தியின் வாரிசுகளாக காட்டிக் கொள்ள முயல்கின்றனர்மக்கள் முன் இருந்த இனவாத நல்லிணக்கத்திற்காக காந்தி தனது வாழ்க்கையை தியாகம் செய்தார்ஆனால்பிரதமர் நரேந்திர மோடிஉள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அவர்களது பாரதிய ஜனதா கட்சிவெறுப்பு மற்றும் வகுப்புவாத பிளவு அரசியலைப் பயன்படுத்தியே ஆட்சிக்கு வந்தது.

அவர்களின் மதச்சார்பற்ற போலி நடிப்புகளுக்கான உதாரணமாக நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்இந்தியாவெனும் மதச்சார்பற்றசோசலிச ஜனநாயக குடியரசைபாசிச இந்து தேசமாக மாற்றுவதற்கான முதல் ஆக்கிரமிப்பு நடவடிக்கையான குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏவிடகாந்தியின் 150வது பிறந்தநாளில் மோடி-ஷா அரசாங்கத்தின் போலித்தனத்திற்கு மோசமான உதாரணம் எதுவாக இருக்க முடியும்?

இந்தியாவை பாதுகாப்பான சொர்க்கமாக்குவதற்கான காந்தியின் கனவை நிறைவேற்றுவதாக சி.. மற்றும் அதனுடன் இணைந்த தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சிஆகியவை பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களால் கூறப்படும் போதுமோடி அரசாங்கத்தின் அப்பட்டமான இருட்டடிப்பு இன்னும் வெளிப்படையாகத் தெரிகிறதுஅவர்கள் அதற்கு சொல்லக்கூடிய காரணம்ஆப்கானிஸ்தான்பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இஸ்லாமிய நாடுகளால் துன்புறுத்தப்படுவதிலிருந்து தஞ்சம் கோரும் அகதிகளுக்கு என்றுஅகதிகள் சட்ட வழிமுறைகளையே மாற்ற முயல்கின்றனர்

இந்த மூன்று நாடுகளை மட்டுமே புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் குறிப்பிடுகிறதுஆனால்மியான்மர்இலங்கைதிபெத் மற்றும் சீனாவை விட்டு வெளியேறிய மக்களைப்பற்றி, இந்த சட்டம் கண்டுகொள்ளவே இல்லைஅதிலும்குறிப்பாக இந்து,  சீக்கியமற்றும் கிறிஸ்தவர்களை மட்டுமே இந்த சட்டம் பட்டியலிடுகிறதுமுஸ்லீம் அகதிகளை இந்திய குடியுரிமை சட்டத்தில் இருந்து விளக்கிவிட்டுஇந்த நாட்டை இரு துருவங்களாக பிரிப்பதற்குண்டான முயற்சியை மோடி அரசு முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

காந்தியின் முதல் சத்தியாக்கிரகம் - வன்முறையற்ற உள்நாட்டு ஒத்துழையாமை இயக்கம் 1906ம் ஆண்டு ஜெனரல் ஸ்மட்டின் தென்னாப்பிரிக்கா அரசாங்கத்தின் இனவெறி குடியுரிமைச்சட்டத்திற்கு எதிரானது என்ற உண்மையை மோடிஷா மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்மறப்பது போலும் நடிக்கின்றனர்இந்த போராட்டத்தின் சாரம்சமே ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பதிவு ஆவணங்களை கிழித்துவெகுஜன ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தியது தான்இங்கு நினைவுப்படுத்தப்பட வேண்டும்.

ஆனால்இவர்கள் அதை வசதியாக மறைப்பதற்காகவும்குடியுரிமை சட்டத்தை காந்தி ஆதரித்தார் என்பதாகவும் கூறி,  புதிய குடியுரிமைச் சட்டத்தை நியாயப்படுத்த, 1947 ஆம் ஆண்டில் இந்தியா பிரிக்கப்பட்ட பின்னர்இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரையும், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதாகவும்அவர்கள் சம குடியுரிமை  அனுபவிப்பதை உறுதிசெய்ததாகவும் காந்தியின் அறிக்கையை அவர்கள் தவறாகக்  குறிப்பிடுகிறார்கள்வேண்டும் என்றே திர்த்து வெளியிடுகிறார்கள்

ஆனால், இளைஞர்கள்ஆண்கள் மற்றும் பெண்கள்இந்துமுஸ்லீம்சீக்கிய மற்றும் கிறிஸ்தவர்கள்புதிய குடியுரிமைச் சட்டம் மற்றும் அதனுடன் உள்ள நிர்வாக நடவடிக்கைகளுக்குப் பின்னால் பாஜகவின் கொடூரமான சிந்தனையை புரிந்து கொண்டார்கள்இதனால் தான்,சி...வுக்கு எதிராக முதல் ஒழுங்கமைக்கப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டமாக ஜாமிய மில்லியா இஸ்லாமியாவின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டதுஅதைத்தொடர்ந்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும் முன்னெடுக்கப்பட்டது

பிரிட்டீஷ் சட்டங்கள் நினைவுப்படுத்தல்

பிரபலமான ரவுலட் சட்டம் மற்றும் அதை அடக்குவதற்கான பிரிட்டிஷ் ராஜ் இரக்கமற்ற போலீஸ் கொடூரங்களுக்கு எதிரான நாடு தழுவிய அகிம்சை போராட்டத்தை நினைவூட்டுகிறதுதில்லி காவல்துறை மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள காவல்துறைநேரடியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் .பிமுதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் உத்தரவின் பேரில்அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டனர்

அமைதியான போராட்டத்தின் மூலம் காந்திய வழியைக் கடைப்பிடிப்பதில்இளைஞர்களிடம் புத்திசாலித்தனம் இருந்த போதிலும்பா..அரசாங்கம் பிரிட்டீஷ் காலனித்துவ காவல்துறையின் மிருகத்தனமான வழிகளைப் பின்பிற்றியதை நாம் மறக்க முடியாதுஇதன்மூலம்எதிர்ப்பு தெரிவிக்கும் இளைஞர்களின் நடத்தையும்அடக்குமுறை அரசாங்கத்திற்கும் உள்ளான வித்தியாசங்களை புரிந்து கொள்ள முடிந்தது

அதேப்போன்று, CAA எதிர்ப்புப் போராட்டத்திற்கு முஸ்லிம்கள் மட்டுமே தலைமை தாங்குகிறார்கள் என்ற பிரச்சாரத்துடன் ஒரு இந்து-முஸ்லீம் பிளவுகளை உருவாக்க மோடி-யோகி அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சி பரவலான போராட்டங்களில் கைகோர்த்த அனைத்து மத சமூகத்தினராலும் தோல்வியடைந்ததுஉண்மை என்னவென்றால்முஸ்லிம்கள்பெரும்பாலும் பெண்கள்பல நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் 24x7 உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தினர்ஆனால் அவர்களுக்கு இந்துசீக்கிய மற்றும் கிறிஸ்தவ ஆண்களிடமிருந்து பரந்த ஆதரவு கிடைத்ததன் மூலம்இந்தியா மதச்சார்பற்றத்தன்மையின் அடையாளத்தை உயர்த்திப் பிடித்தது

ஒரு கொடூரமான நடவடிக்கையில்.பிமுதல்வர் யோகி ஆதித்யநாத் மாநில தலைநகரான லக்னோவில் உள்ள முஸ்லிம்கள் மீது, புதிதாக காவல்துறையில் சேர்த்த குழுக்களை ஏவிவிட்டு, ஆண்களையும் குழந்தைகளையும் இரக்கமின்றி அடித்துதங்கள் வீடுகளை சூறையாடிகொள்ளையடித்துபெண்களை பாலியல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தினர். சிறுவர்கள் மதரஸாவில் இருந்து வெளியே இழுத்து அடித்தனர். இதன்மூலம், மக்களை அமைதியாக்கிவிடலாம் என்றும், சி.ஏ.ஏ.வுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதையும் காட்ட யோகி அரசு முயற்சித்தது.
 ஆனால், சமூக ஊடகங்களில் வீடியோவை நேரடியாக ஒளிபரப்பியதன் மூலம்யோகி காட்டுத்ர்பாரின் சதிசெயல் அம்பலமானது. நிகழ்வூகளை உலகிற்கு கொண்டு வந்த சமூக ஆர்வலரும், நடிகருமான சதாஃப் ஜாபர் போன்றவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பே, போலீஸ் காவலில் வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர்.


இதுவெல்லாம், பா.ஜ.க.வுக்கு வெற்றியை தேடித்தந்ததா என்றால் இல்லை.
CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது காணப்பட்ட முன்மாதிரியான இந்து-முஸ்லீம் ஒற்றுமை ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கிலாபத் இயக்கத்துடன் (1919-1924) இணையாக இருந்ததுமகாத்மா காந்திக்கு அலி சகோரர்கள் ஆதரவாக நின்றது போன்ற ஒரு தோற்றத்தை, பெரும்பாலும் முஸ்லீம் பெண்களால் ஷாஹீன் பாக் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டாலும், அனைத்து  மத சமூக மக்களோடும் ஒற்றுமையாக நடைபெறுவதை பார்க்க முடிகிறது.காண்கிறதுஷாஹீன் பாகின் தியாகிகளுக்காக, சீக்கியர்கள் ஒரு சமூக சமையலறையை நடத்தி வருவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகளாகும்.


காந்தியைப் பின்பற்றுபவர்களுக்கும் கோட்சேவைப் பின்பற்றுபவர்களுக்கும் இடையிலான வெளிப்படையான வேறுபாடு அவர்களின் சின்னங்கள், நடை மற்றும் அறிக்கைகளிலும் காணப்படுகிறது. ஷாஹீன் பாக் சத்தியாக்கிரகிகள் தேசியக் கொடியை அசைத்து, இந்திய அரசியலமைப்பிற்கு விசுவாசமாக உள்ளனர், மகாத்மா காந்தி, பாபா சாஹேப் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரைப் பாராட்டுகிறார்கள். இதற்கெதிராக, மோடி மற்றும் ஷா ஆதரவாளர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். பெண்களை கொச்சைப்படுத்துகிறார்கள். ‘தேஷ் கே கடார்’ (நாட்டின் துரோகிகள்) என்று அழைக்கும் நபர்களை சுடுவதாக அச்சுறுத்துகின்றனர்.


நாடு முழுவதும் தற்போது பிரபலமான CAA எதிர்ப்பு இயக்கம், அதன் பொதுவான யுத்தக் குரல் ‘ஹம் லத் கே லெங்கே ஆசாதி’ (நாங்கள் எங்கள் சுதந்திரத்தை மீட்டெடுக்க போராடுவோம்), மகாத்மா காந்தி தலைமையிலான பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இந்தியாவின் வன்முறையற்ற சுதந்திரப் போராட்டத்திலிருந்து உத்வேகம் பெறுகிறது. தற்போதைய மற்றும் கடந்த கால போராட்டங்களுக்கு இடையிலான ஒற்றுமைகள் மிக அதிகம் என்பதை இதன்மூலம் உணர முடிகிறது/

அன்புடன், நெல்லை சலீம்